வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

image_pdfimage_print

வவுனியா தாண்டிக்குளத்துக்கும் ஒமந்தைக்கும் இடையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி. கொழும்பிலிருந்து யாழ்நோக்கி சென்ற புகையிரத்தில் பயணித்த இளைஞனே விபத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இளைஞன் புகையிரத்தின் வாசலிற்கு அருகில் நின்றவர் நிலைதடுமாறி கிழே விழுந்ததாக; சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் யாழப்பாணம் மருதனார் மடத்தை சேர்ந்த விஜயசீலன் கிறிஸ்ரிதீபன் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரனையினை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.