இரண்டு வாரங்களில் நீரிழிவு நோயிலிருந்து விடுபட ஒரே தீர்வு!!

image_pdfimage_print

தற்போதைய காலத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லாரிடத்திலும் காணப்படுகிறது. இதை அடிக்கடி கேட்கப்படும் ஒரு விஷயமாகவும் மாறி வருகிறது. இப்படி எல்லாரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா? இல்லை இப்பொழுது உள்ள அவசர வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை எல்லாம் மாறி வருகிறது. இதுவும் ஒரு காரணம் தான்.

ஒரு ஆராய்ச்சி அறிக்கை என்ன சொல்கிறது என்றால் 1980-ல் 108 மில்லியன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தற்போது 2014-ன் கணக்குப்படி பார்த்தால் 422 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னமும் நிறைய பேர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்போ கொஞ்சம் யோசித்து பாருங்கள் வரும் காலத்தில் எவ்வளவு பேர் இதனால் பாதிப்படைந்து இருப்பர்.

நமக்கு தெரியும் நீரிழிவு என்பது ஒரு மெட்டாபாலிசநோய். நமது உடல் போதுமான இன்சுலினை சுரக்க முடியாமல் சர்க்கரையானது இரத்தத்தில் கலப்பதால் அதன் அளவு அதிகரித்து வருவது தான் இந்த நீரிழிவு. உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உங்களுக்கு ஏகப்பட்ட அறிகுறிகள் தென்படும். சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காயங்கள் மெதுவாக ஆறுதல் போன்றவை ஏற்படும்.

இதில் பெரும் கொடுமை என்னவென்றால் இந்த பிரச்சனையை நீங்கள் குணப்படுத்த முடியாது ஆனால் கட்டுப்படுத்தலாம். சிலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படவில்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. இதற்கு காரணம் அவர்களின் குடும்ப பழக்கவழக்கங்கள், உணவு முறை போன்றவை தான். சரி இனி நீரிழிவு நோயினை 2 வாரங்களில் குணப்படுத்தும் மருத்துவத்தினை பார்க்கலாம்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்: கோதுமை 100 கிராம், பார்லி 100 கிராம், கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம், தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை: 5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள். அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும். அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும். அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை: உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.
அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால் 2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.