பாலத்திற்கு அருகில் பெண்ணின் தலை மீட்பு!

இனந்தெரியாத பெண் ஒருவரின் தலை ஒன்று பொல்கொட பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (04) காலை இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த பெண் தொடர்பான அடையாளம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.