மைத்திரி இவ்வாறு செய்வார் என்று நினைக்கவில்லை! அமெரிக்க சி.ஐ.ஏ ரணிலுக்கு சொல்லும் வரை விடயம் தெரியாது?

image_pdfimage_print

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால அக்டோபர் 15ம் திகதிக்கு முன்னதாகவே, பிரதமர் ரணிலை வீட்டுக்கு அனுப்ப முற்பட்டுள்ளார். ஆனால் கொழும்பில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர், அவசரமாக அமெரிக்க தூதுவரை சந்தித்து தனக்கு கிடைத்த தகவலை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் இத்தகவலை தனது தலைமைக்கு அனுப்பியுள்ளார் என்ற செய்திகள் கசிந்துள்ளது. இதனை அடுத்தே அமெரிக்க இலங்கை அரசின் மீது வேவு பார்க்க ஆரம்பித்துவிட்டது.

ராஜாங்க அமைச்சர்கள் மத்தியில் இந்தப் பேச்சு அரசல் புரசலாக இருந்தவேளை. மைத்திரி இவ்வாறு செய்வார் என்று ரணில் நினைக்கவில்லையாம். காரணம் மைத்திரி ரணிலோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார். இது ஒன்றும் அவருக்கு புதிதல்லவே. ஒரே வாழை இலையில் மகிந்தவோடு உணவு உண்டு விட்டு. அடுத்த நாள் தன்னை ஜனாதிபதி வேட்ப்பாளராக அறிவித்தவர் தானே இந்த மைத்திரி. இதேவேளை அமெரிக்க உளவு நிறுவனம் இதனை உறுதி செய்து. என்னேரமானாலும் உங்கள் பதவி பறி போகலாம் என்று கூறிய பின்னரே ரணில் இதனை நம்பியுள்ளார். ஆனால் அதற்குள் மைத்திரி முந்திவிட்டார்.

இருப்பினும் இந்த தகவலை அமெரிக்காவுக்கு தெரிவித்த நபர் குறித்தும். அமெரிக்கா கொழும்பில் எந்த விதமான புலனாய்வு தகவல்களை சேகரிக்க முற்பட்டது என்பது தொடர்பாகவும் முழு அளவில் ஆராயுமாறு தற்போது மைத்திரி தனது புலனாய்வு துறைக்கு கட்டளை பிறப்பித்துள்ளாராம். இது அமெரிக்காவை மேலும் சீண்டும் நடவடிக்கையாக அமைந்துள்ளது என்கிறார்கள் விடயம் அறிந்த வட்டாரத்தினர்.