சற்றுமுன் கிளிநொச்சியில் கோரவிபத்து! இரு இளைஞர்கள் பலி!

சற்றுமுன் கிளிநொச்சியில் கோர விபத்து. இன்று 06.11.2018 இரவு 7.00 மணியளவில் ஏ.9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இன்று கிளிநொச்சிப் பகுதியில் அதிக மழை பெய்துகொண்டிருந்த வேளையில் ஏ.9 வீதியில் எரிபொருள் பவுசரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில ் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்ததாகவும் ஒருவர் செல்வாநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீவன்(18) மற்றைய இளைஞன் அடையாளம் காணப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.