நாடாளுமன்றை கூட்ட முடியாது – நீதிமன்றம் அறிவிப்பு!

image_pdfimage_print

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்துமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீதான மனுவிற்கு எதிராக அடிப்படை எதிர்ப்பு தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனு மூலம் சவாலுக்கு உட்படுத்த முடியாதென்றும் சட்டமா அதிபருக்கு பதிலாக ஆயரான மேலதிக சொலிஸ்ரர் ஜெனரல் இந்திக தெமுனி டி சில்வா உயர்நீதிமன்றத்தில் அறிவித்தார்.

மேலும் இந்த மனு உயர்நீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கவில்லை என்றும் அவர் மன்றில் சுட்டிக்காட்டினார். இன்றைய தினம் இந்த மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா நீதியரசர்களான சிசிர டி ஆக்குறூப் மற்றும் விஜித் மலலகொட ஆகியோர் அடங்கிய 3 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதியரசர் விஜித் மலலகொட இல்லாததினால் நீதியரசர் குழுவில் இதனை எடுத்துக்கொள்வதற்காக காலஅவகாசத்தை பெற்றுக்கொள்வதற்காக மனு மூலம் கோருமாறு உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு தாக்கல் செய்திருந்தார். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தினால் நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் இந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரதிவாதிகளாக இந்த மனுவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சட்டமா அதிபர்கள் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.