யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து விபத்து!

image_pdfimage_print

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி கவிழ்ந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

அதிக மழையின் காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் காயமடைந்த ஐவரும் நொச்சியகம வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நொச்சியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.