130 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கவுக்கு ஆதரவு! ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சி!

நாடாளுமன்றம் கூடிய பின்னர் 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரி மாளிகையில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புதிய அரசில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்த மனுஷ நாணயக்கார தற்போது எம்முடன் இணைந்து கொண்டுள்ளார். இனிவரும் நாள்களில் பல அமைச்சர்கள் படிப்படியாக விலகுவார்கள். ரணில் விக்கிரமசிங்க அணியுடன் இணைந்து கொள்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றதில் 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு ஆதரவாக உள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் தொடர்பான விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குச் சரியான முறையில் செயற்பட வேண்டும்.

ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல்வாதிகள் நாடாளுமன்றில் இன்னும் இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.