இனிமேல் யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க விரும்பவில்லை. ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளேன்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்கார் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தான் எடுக்கப்போகும் ஓய்வு குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியபோது… “இனிமேல் யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க விரும்பவில்லை.சாவித்திரியாக நடித்ததிலேயே நிறைவு அடைந்துவிட்டேன். நடிக்க வந்ததில் இருந்து வேகமாக தொடர்ந்து நடித்து வருகிறேன். எனவே சில மாதங்கள் ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளேன். வயலின் கற்றுக்கொள்ள இருக்கிறேன். சமைக்கவுள்ளேன். உடற்பயிற்சி செய்யப்போகிறேன்.மேலும் இதுவரை 20க்கு மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். விரைவில் புத்துணர்வோடு மீண்டும் வேகம் எடுப்பேன்” என்றார்.