இருதய நோய்களில் இருந்து மீண்டு வந்த 200,000 பேர் தினமும் இந்த ஒரு பொருளைதான் சாப்பிட்டார்களாம்! ஆய்வு முடிவு!

உங்களுக்கு சீஸ் சாப்பிடுவது மிகவும் பிடித்த விஷயம் என்றால் இந்த செய்தி உங்களுக்கு இனிமையான ஒரு செய்தியாக இருக்கும்.

புதிய கண்டுபிடிப்பு ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் தினமும் 40 கிராம் அளவு சீஸ் சாப்பிடுவது உங்களது இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறியுள்ளனர். இருதய நோய்களில் இருந்து மீண்டு வந்த 200,000 பேர் தினமும் இந்த ஒரு பொருளைதான் 40 கிராம் அளவு உணவில் சேர்ந்துள்ளனர். இந்த பகுதியில் வெண்ணெய்யின் ஆரோக்கிய நலன்களை பற்றி காணலாம்.

கார்டிவாஸ்குலர் நோய்: புதிய ஆய்வு ஒன்று நாம் ஆரோக்கியம் இல்லை என்று நினைத்து சாப்பிடாமல் இருக்கும் இந்த சீஸ் ஆனது உடலுக்கு மிகவும் நல்லது என்றும் இது கார்டிவாஸ்குலர் இருதய நோயில் இருந்து நம்மை காப்பாற்ற உதவுகிறது என்றும் அறிவித்துள்ளது.

இதில் என்ன இருக்கிறது? இதில் உடலுக்கு மிக முக்கியமான கால்சியம், ஜிங்க், விட்டமின் ஏ மற்றும் பி 12 ஆகியவை உள்ளன. இந்த சீஸ்ஸில் உடலுக்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஏன் தீங்கு என்கிறோம்? நாம் அதிகமாக சீஸ் சாப்பிடுவது என்பது உடல் எடையை அதிகரிக்கும் என்றும், உடல் எடை அதிகரிப்பதன் மூலமாக இது இருதய பிரச்சனைகள் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறுப்படுகிறது. இது உண்மை என்றாலும் நாம் அதிகமாக சாப்பிடுவதன் காரணமாகவே இந்த பிரச்சனை உண்டாகும்.

ஆய்வு: இந்த சீஸ் சாப்பிட்டால் உண்மையில் இருதய நோய் பாதிப்பு உண்டாகுமா என்பது பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 200,000 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 10 ஆண்டுகளாக தொடர்ந்து சீஸ் சாப்பிட்டு வந்தார்கள். 10 ஆண்டுகள் கழித்து இவர்களது உடலை பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு எந்தவித இருதய கோளாறும் உண்டாகவில்லை.

எப்படி இது சாத்தியம்? ஆய்வில் கலந்து கொண்டவர்கள் தினசரி 40 கிராம் அளவு சீஸ் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதாவது 1.41 அவுண்ஸ் ஆகும்.

இதனால் அவர்களுக்கு 10 சதவீதம் அளவு இருதய ஸ்ரோக் வரும் பிரச்சனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 14 சதவீதம் அளவுக்கு அவர்கள் கார்டிவாஸ்குலர் இருதய நோயில் இருந்து தப்பித்துள்ளனர்.

பல் குழிவுறுதல்: சீஸ் ஒரு சுவையான, ஆரோக்கியமான் உணவாகும். ஒரு அவுன்ஸ் சீஸ் 27mg கொழுப்பு சத்தை வழங்குகிறது. இது அதிக அளவு கொழுப்பு சத்தாகும். ஆனாலும் இதில் வேறு சில சத்துக்களும் அடங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு அவுன்ஸ் சீஸில் 7gm புரோட்டின் அடங்கியுள்ளது.

20% கால்சியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல் குழிவுறுதலைத் தடுக்கவும் உதவுகிறது.

எடையை குறைக்கலாம்: வெண்ணெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் நீங்கள் அளவுடன் வெண்ணெய்யை சாப்பிட்டால் இது உங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும். வெண்ணையில் உள்ள லெசிதின் உங்களது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் உங்களது உடல் எடை குறையும்.

புற்றுநோய்: அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க நீங்கள் வெண்ணெய் சாப்பிடலாம். வெண்ணெய் சாப்பிடுவது என்பது உங்களை புற்றுநோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

யாருக்கு எல்லாம் முக்கியமாக தேவை?
விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். காசநோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இது அதிக நேரத்துக்கு உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவான டீன் ஏஜ் இளைஞர்களும் ஓரளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

எப்படி சாப்பிடலாம்?
பெரும்பாலும் வெண்ணெயை பிரெட் மீது தடவியே பயன்படுத்துவோம். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி நமக்கே சில வேளைகளில் சலிப்பைத் தரும்.

எனவே, சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சிறிதளவு சேர்ப்பது சுவையைக் கூட்டும். சூடான சாம்பாரில் சேர்த்து சாப்பிடலாம். தோசை சுடும்போது வெண்ணெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அதிகமாக பயன்படுத்தினால் பாதிப்பு உண்டாகும்..
பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை தொடர்வது மட்டுமின்றி, உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆகவே, கவனம் தேவை.