கிளிநொச்சி பரந்தன் சந்தியில் கோர விபத்து!

கிளிநொச்சி பரந்தன் சந்திப்பகுதியில் சிற்றூர்தியொன்றும் இராணுவ வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் ஏ-9 வீதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இரானுவ ரக் வாகனம் ஒன்றும் பயணிகள் சிற்றூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

இச்சந்தர்ப்பத்தில் கட்டுப்பாட்டையிழந்த இரானுவ வாகனம் வீதியின் அருகில் உள்ள மதிலை உடைத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைமை அலுவலகதிற்குள் புகுந்துள்ளது. எனினும் இந்த விபத்தின் போது உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.