லண்டன் விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண்டாடப்பட்ட தீபாவளி- இணையதளத்தில் வைரலாகிய வீடியோ.

image_pdfimage_print

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை கொண்டாடினர்.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி திருநாள் (6.11.18) உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி, பல்வேறு மதத்தினரும் பாகுபாடு இன்றி இந்தியாவில் கொண்டாடினர்.

இந்நிலையில், லண்டன் நகரில் உள்ள ஹெத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை ஆனந்தமாக ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். இந்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.