குழந்தை தனது பெற்றோர்களுடன் மருத்துவ நிலையத்திற்கு சென்ற போது காத்திருந்த பேரதிர்ச்சி!

image_pdfimage_print

சிலாபம், மாதம்பை வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் மேலும் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

மாதம்பை, வத்துவத்த பகுதியை சேர்ந்த ரனேஸ் நிமல்ஷ என்ற குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தனது பெற்றோர்களுடன் மருத்துவ நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.

குறித்த குழந்தை பயணித்த முச்சக்கரவண்டி லொறி ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.