ஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றி! மகிழ்ச்சியில் ரணில்!

image_pdfimage_print

நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இரு நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் விசேட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது டுவிட்டரில் “ நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர். நாம் நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு சென்று நாட்டு மக்களின் இறையாண்மையை நாம் மீண்டும் நிரூபித்துக்காட்டுவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.