வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

மிஹிந்தலை, மாத்தளை சந்திக்கு அருகில் புத்தளம் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். டிப்பர் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (12) இரவு 11 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் பயணித்தவர் பலத்த காயமடைந்த நிலையில் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த நபர் அநுராதபுரம், சமகிபுர பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான யொஹான் மதுஷங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மிஹிந்தலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.