மஹிந்த-மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு!

சிறிலங்கா உச்ச நீதிமன்றினால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக வழங்கிய இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக மைத்ரி – மஹிந்த அணியினர் அறிவித்துள்ளனர்.சிறிலங்கா அரச தலைவரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் வர்த்தக வாணிப்பத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இந்தத் தகவலை மைத்ரி – மஹிந்த அணியினரின் சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்காக முன்னிலையாகிய சடடத்தரணி பிறேம்நாத் சீ தொலவத்தவும் உறுதிப்படுத்தினார்.