முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில், மயங்கிய நிலையில் இருந்த யுவதி ஒருவர் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒட்டுசுட்டான் வெள்ளிமலை ஏற்றக் காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் கை வெட்டப்பட்டு மயங்கிய நிலையில் காணப்படுவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த யுவதியை மீட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.மேலும் சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மீட்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் குறித்த யுவதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த 24 வயதுடை யுவதி ஒருவரே இவ்வாறு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.