மைத்திரிக்கு விசா தடை! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி!

image_pdfimage_print

ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல மைத்திரிக்கு தடை விதிக்கவேண்டும் என்ற முடிவை எட்டவுள்ளதாக, அதன் வெளிநாட்டு தூதுவர் பிரசில்ஸ்சில் கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் கொடுத்துள்ள அழுத்தம் காரணமாக இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எட்டலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.

இருப்பினும் ஒரு நாட்டு ஜனாதிபதிக்கு தடை விதிப்பது என்பது , நடைமுறைக்கு ஒவ்வாத விடயம். இதேவேளை GSP + வரி விலக்கை ரத்துச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. பிரித்தானியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த கோரிக்கையை முன் வைக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

இதனூடாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை ஒன்றை எடுக்க திட்டம் தீட்டியுள்ளது என்பது தெரிய வருகிறது. இது பொருளாதார தடையாக அல்லது விசா வழங்க தடை செய்யும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.