நாடாளுமன்றில் இரத்தக் களறி! போர்க்களமாக மாறிய பாராளுமன்றம்!

image_pdfimage_print

நாடாளுமன்றில் தற்பொழுது பெரும் குழப்பம் நிலவிக்கொண்டிருக்கின்றது. நாயகரின் ஆசனத்தை மஹிந்த தரப்பினர் நெருங்கியபோது கடும் பதற்றம் நிலவியதுடன் உறுப்பினர்களுக்கிடையே அவ்வப்போது கைகலப்பும் இடம்பெற்றுள்ளது.

சபை கூடிய நிலையில் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதால் அவரது பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சபா நாயகர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதனால் சபையில் கடும் கூச்சல் குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் சபா நாயகர் தனது ஆசனத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்‌ஷவும் சபையை விட்டு அகன்றுள்ளார்.

பாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் அமிளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நகர்ந்தனர்.

அவ்வேளை சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களும் படைக்கல சேவியர்களும் அவ்விடத்தில் குவிந்தனர்.

இரத்தம் ஒழுக பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலுனு அமுனுகம. இதனிடையே கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் திலுனு அமுனுகம சபாநாயகரின்  ஒலிவாங்கியை முறித்த நிலையில் அவரது கையில் காயமடைந்து இரத்தம் ஒழுக சபா பீடத்திலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.