பாராளுமன்றிற்குள் கத்தியுடன் பாய்ந்த பாலித! படங்கள் உள்ளே!

image_pdfimage_print

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெருமா இன்று நாடாளுமன்றிற்குள் கத்தியுடன் வந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி மிரரின் புகைப்பட ஊடகவியலாளரான சஜீவ சந்திக்கவினால் இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எடுக்கப்பட்ட குறித்த படங்களில் பாலித தேவரப்பெருமா கத்தியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தாக்க வருவதும் அதனை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து அவரிடமிருந்த கத்தியைப் பறிக்க முற்படுவதுமான தொடர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தாங்கள் ஜனநாயக வாதிகள் என்றும் ஜனநாயகத்தைக் காக்கவே நாடாளுமன்றைக் கூட்டுமாறு வலியுறுத்தியதாகவும் கூக்குரலிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கத்தியுடன் நாடாளுமன்றுக்கள் ஏனைய உறுப்பினர்களைத் தாக்க முனைந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் போலி ஜனநாயக முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.