மீண்டும் எரிபொருள் விலை குறைப்பு! இன்று நள்ளிரவு முதல்!

image_pdfimage_print

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 140 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதுடன், 95 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 164 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் புதிய விலை 111 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதுடன், சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 136 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.