முல்லைத்தீவில் உடல் கருகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது!

image_pdfimage_print

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் மின்சார வேலிக்குள் சிக்குண்டு உடல் கருகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

காட்டுக்கு வேட்டைக்காக சென்று கடந்த ஓரிரு நாட்களாக தேடப்பட்டு வந்த கொக்குதொடுவாய் பகுதியைச் சேர்ந்த 42 வயதான கனகையா உதயகுமாரே இன்று (15-11-2018) உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெலிஓயா பகுதியைச் சேர்ந்தவர்களால் போடப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு இந்த இறப்பு இடம்பெற்றதாக எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைநியூஸ் செய்திகளுக்காக சரண்ராஜ்