பொலிஸார், எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது மிளகாய்த்தூள் வீச்சு!

சபாநாயகர், மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், மிளகாய்த்தூள் கலந்த நீர் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக விஜித்த ஹேரத், காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் எக்காரணம் கொண்டும், சபை அமர்வை ஒத்திவைக்க வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.