இரத்தினபுரி, மாரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேரும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 26 வயதுடைய பெண் ஒருவரும் 2 வயதும் 9 மாதங்களுமான குழந்தை ஒன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டள்ளதுடன் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.