முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரையும் முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை அயல் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அயல் வீட்டில் இருந்த 13 வயது சிறுவனும் 74 வயதுடைய சிறுவனின் தந்தையும் குறித்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (14.11.2018) இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமி பெண் உறுப்பில் வேதனையில் தவித்த போது 15.11.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைக்கு தாயார் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி தங்கி நின்ற வீட்டில் உள்ள 13 வயது சிறுவன் மற்றும் அவனது 74 வயதுடைய தந்தை ஆகியோர் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நேற்று முள்ளியவளை பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுவன் சம்பவத்தை ஒத்துக் கொண்டுள்ளதை தொடர்ந்து குறித்த சிறுவனையும் சிறுவனின் தந்தையையும் கைதுசெய்த பொலிசார் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர் என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.