நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி தெரிந்துகொள்ள இதை படியுங்கள்!பிறந்த நட்சத்திர பலன்கள்!

அஸ்வினி நட்சத்திர பலன்கள்

துடிப்பும் சுறுசுறுப்பான குணமும் கொண்டவர் நீங்கள். எதிலும் ஆர்வமாக செயல்படுவீர்கள். அடிப்படையான விஷயங்களில் திருப்தியடையாமல் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென விரும்புவீர்கள். எதையும் உடனடியாக முடித்துவிட வேண்டுமென விரும்புவீர்கள். வேகம், சக்தி மற்றும் சுறுசுறுப்பு உங்களிடம் தெளிவாக காணப்படும். உங்களுக்கு ஒரு யோசனை தோன்றினால் அதனை உடனடியாக செயல்படுத்த நினைப்பீர்கள்.

விளையாட்டில் ஆர்வமும் புத்திக்கூர்மையும் பெற்றிருப்பீர்கள். எதையும் பற்றி வேகமாக புரிந்துகொண்டு சரியான முடிவுகளை எடுப்பதில் கில்லாடி நீங்கள். அமானானுஷ்யம், சமயம் மற்றும் மந்திர தந்திரங்களில் ஆர்வம் கொண்ட மர்மமான மனிதர் நீங்கள். தைரியமும் வீரமும் கொண்ட உங்களுக்கு கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும்.

எதிரிகள் உங்களுக்கு பெரிய தொல்லைகள் அளிக்க முடியாது ஏனெனில் உங்களுக்கு அவர்களை சமாளிப்பது கைவந்த கலையாகும். அதிகாரம், அழுத்தம் அல்லது வேறு எதுவும் உங்களை கட்டுப்படுத்த முடியாது. உங்களை அன்பால் மட்டுமே கட்டிப்போட முடியும். பார்ப்பதற்க்கு அமைதியானவராகவும் கட்டுபாடுடயவராகவும் திகழ்வீர்கள். எந்த முடிவையும் அவசர கதியில் எடுக்க மாட்டீர்கள். நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் ஆராய்ந்து யோசித்து எடுக்கும் முடிவுகளாகவே இருக்கும். உங்களது முடிவை யாராலும் பாதிக்க முடியாது.

உங்களது பணிகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென உங்களுக்கு நன்றாகவே தெரியும். இது எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு சிறந்த நண்பராக திகழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக எதையும் செய்வீர்கள். எவ்வளவு கஷ்டமான சூழல் ஏற்பட்டாலும் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கைவிட மாட்டீர்கள். பாரியம்பரியத்தை விரும்புபவராக இருப்பினும் நவீன விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கூடுதலாக சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் சிரப்பாகவும் நிர்வகிக்க முயற்சி செய்வீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்: அனைத்திலும் சிறந்து விளங்குபவராக உங்களை கூறலாம். எந்த விஷயத்தை பற்ரியும் சிறிதளவு ஞானத்தையாவது பெற்றிருப்பீர்கள். கல்வி சார்ந்த துரை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் எனினும் நீங்கள் இதர பிரிவுகளான பார்மசிட்டிக்கல், செக்யூரிட்டி, போலீஸ், மிலிட்டரி, ரகசிய சேவைகள், இஞ்சினீயர், ஆசிரியப்பணி, பயிற்சியளித்தல் போன்றவற்றிலும் முயற்சி செய்யலாம். த்த்துவம் மற்றும் இசை ஆகியவை உங்களது கவனத்தை ஈர்க்கும். பல வகையிலும் வருமானம் வரும் சூழல் இருக்கும். 30 வயது வரை வாழவில் பல ஏற்றத்தாழவுகளை சந்திப்பீர்கள்.

இல்லற வாழ்க்கை: உங்களது குடும்பத்தை அதிகம் நேசிப்பீர்கள். என்னினும் தந்தையுடன் சில கருத்து வேற்ருமைகள் தோன்றலாம். எனினும் தாய்வழி உறவுகள் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்கள். குடும்பம் அல்லாத உறவுகளுக்கு உதவுவார்கள். உங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெண் குழந்தைகளை விட உங்களுக்கு ஆண் குழந்தைகளே அதிகம் இருப்பர்.

பரணி நட்சத்திர பலன்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெரிய மனதுக்கு சொந்தக்காரர். மேலும் பிறர் கடுமையான சொற்களை உங்கள் மேல் வீசினாலும் அதனை பெரிது படுத்த மாட்டீர்கள். உங்களது கண்கள் மிக பெரியதாகவும் உங்களை பற்றி அதிகம் வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். எதிரில் உள்ளவர்களிடம் உங்களது கண்களாலேயே பேசி விடுவீர்கள்.

மனம் கவரும் சிரிப்பாலும் நல்ல குணத்தாலும் உங்கள் மேல் அனைவரும் பைத்தியமாகிவிடும்படி செய்துவிடுவீர்கள். மற்ரவர்களை பெரிதும் ஈர்க்கும் தன்மை கொண்டவர் நீங்கள். உள்ளுக்குள் கவலைகள் இருந்தாலும் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக திகழ்வீர்கள். எல்லோரிடமும் நட்புணர்வுடன் பழகும் நீங்கள், எதிர்காலத்தை பற்றி அதிக யோசிக்க மாட்டீர்கள். வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து பார்க்க விரும்பும் நீங்கள் ஆபத்துகளை சந்திக்க தயங்கமாட்டீர்கள்.

சரியான திசையை நோக்கி பயணித்தல் மற்றும் அன்பக்குரியவர்களின் ஆதரவு ஆகியவையே உங்களது லட்சியத்தை எளிதாக அடைய உங்களுக்கு உதவும். குறுக்கு வழிகளில் செல்லமாட்டீர்கள் நேர்மையான எளிய வழியே உங்களுக்கு பிடித்தமானது. உங்களது மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்ய மாட்டீர்கள். உள்ளதை உள்ளபடியே அனைவரிடமும் தெரிவிப்பீர்கள். இதனால் ஒரு ஆரோக்கியமான உறவுமுறை பாதிக்கும் என்று தெரிந்தாலும் வெளிப்படையாக செயல்பட தயங்க மாட்டீர்கள்.

நேர்மையான நீங்கள் உங்களது சுய மரியாதையை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். எனவே உங்களது வேலைகளை நீங்களே எப்போதும் செய்து கொள்ள விரும்புவீர்கள். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். புனித்த்தன்மை, அழகு, கலை ஆகியவற்றை இது குறிக்கும். இதனால் நீங்கள் புத்திக்கூர்மை, அழகை ஆராதிக்கும் குணம், இசை விரும்பி, சுகபோகங்களில் ஆர்வம், கலாரசனை கொண்டவராக, அதிக பிரயாணம் செய்ய விரும்புபவராக இருப்பீர்கள்.

நல்ல ஆடை ஆபரணங்கள் அணியவும் ராஜ போக வாழ்வு வாழவும் விரும்புவீர்கள். மேலும் உங்களுக்கு கலைகள், இசை, வேடிக்கை வினோதங்களில் ஆர்வம் இருக்கும். பெண்களுக்கு இந்த கிரக அமைப்பு ஓரளவுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் சுக்கிரனின் தாக்கத்தால் பெண்தன்மைகள் (அழகு மற்ரும் கலாரசனையின் அதிபதி சுக்கிரன் என்பதால்) அதிகரிக்கும்.

தன்னம்பிக்கையும் பெரியவர்களிடம் மரியாதையும் கொண்டவர் நீங்கள். வாய்ப்புகள் உங்களை தேடி வரும்வரை காத்திருக்காமல் வாய்ப்புகளை நீங்கள் தேடி செல்வீர்கள். உங்களது குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். உங்களது வாழ்க்கை துணை உங்களை அதிகம் நேசிப்பதோடு அல்லாமல் அவரை உங்களது அன்பால் ஆட்சி செய்வீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்: இசை, நடனம், கலை மற்றும் நடிப்பு மற்றும் நாடகம், மாடலிங்,, ஃபேஷன் டிசைனிங், புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் போன்ற துறைகள் மற்றும் அழகு படுத்துதல் தொடர்பான துறை, நிர்வாகப்பணி, விவசாயம், விளம்பரம், மோட்டார் வாகனம் தொடர்பான பணிகள் ஹோட்டல் துறை, சட்டம் போன்ற துறைகளில் உங்களுக்கு வெற்றி கிட்டும். பணத்தை சேமிப்பதில் நீகள் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.

இல்லற வாழ்க்கை: உங்களது குடும்பத்தை அதிகம் நேசிப்பீர்கள். அவர்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க விரும்பமாட்டீர்கள். உங்களுக்கு 23 முதல் 27 வயதுக்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்களது குடும்பத்தாரின் தேவைகளை தீர்ப்பதையே முக்கியமாக கருதி அதிக பணத்தை செலவழிப்பீர்கள். உங்களது வாழ்க்கை துணையிடமிருந்து அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெறுவீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள். உங்களது இத்தகைய குணங்களால் நீங்கள் அழகான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.

கிருத்திகை நட்சத்திர பலன்கள்

நீங்கள் ஒரு சிறந்த ஆலோசகர் மற்றும் தன்னம்பிக்கை நிரம்பியவர்.. மதிப்பும் மரியாதையுடன் நடந்து நல்ல வாழ்க்கை வாழ்வீர்கள். உங்களது முகம் பொலிவாக இருக்கும் உங்களது நடை வேகமானதாக இருக்கும். ஆங்கிலத்தில் கிரிட்டிக்கல் என்ற சொல் கிருத்திகை என்ற சொல்லில் இருந்தே வந்ததாகும். அதாவது மனிதர்களை ஆழ்ந்து கவனித்து அவர்களின் குறைகளை சரி செய்வீர்கள்.

எந்த வேலையின் முடிவினை ஆராய்ந்து கணிப்பதிலும் அதில் மறைந்துள்ள நன்மை தீமைகளை கண்டறிவதில் நிபுணராக இருப்பீர்கள். உங்களது வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பு இருக்கும். சமூக சேவையில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். பெயர் மற்றும் புகழ் பெறுவதிலோ அல்லது மற்ரவர்களிடமிருந்து உதவிகளை பெறுவதிலோ ஆர்வம் காட்ட மாட்டீர்கள். உங்களது எல்லா வேலைகளையும் நீங்களே செய்து கொள்ள விரும்புவீர்கள்.

சூழலுக்கு தகுந்தாற்போல செயல்பட மாட்டீர்கள். நீங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். வெளியே பார்ப்பதற்கு கடுமையானவராக இருந்தாலும் உங்களது அன்பும், காதலும் நேசமும் நிரம்பி இருக்கும். ஒழுக்கத்தை பின்பற்றாவிட்டால் கோபமடைவீர்கள். யாரையும் பயமுறுத்தி காரியம் சாதிக்க விரும்பமாட்டீர்கள். இது தவர உங்களுக்கு ஆன்மீகத்திலும் ஆர்வம் இருக்கும். ஜபம், தியானம், விரதங்கள் போன்றவற்றால் முன்னேற்றம் காண்பீர்கள்.

ஆன்மீகப்பாதையில் செல்ல நீங்கள் முடிவு செய்துவிட்டால் இந்த உலகில் யாராலும் உங்களை தடுக்க முடியாது. கடின உழைபாளியான நீங்கள் சில விஷயங்களை அடிக்கடி செய்ய விரும்புவீர்கள். கல்வி, வேலை அல்லது பிசினஸ் இப்படி எந்த துறையாக இருந்தாலும் மற்றவர்களை விட முன்னணியில் இருக்க விரும்புவீர்கள். பின்வாங்குதல் மற்றும் பின்னடைவு ஏற்படுதல் ஆகியவற்றை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

உங்களது நேர்மையான குணத்தால் மற்றவர்களால் ஏமாற்றப்படும் சூழல் ஏற்படலாம். உங்களது பிறந்த ஊரிலிருந்து தள்ளி இருப்பது நன்மை பயக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவதில் சிறந்தவர் நீங்கள். மற்றவரின் உதவியாலோ அல்லது தவறான வழியிலோ பெயர், புகழ மற்றும் பணத்தை சம்பாதிக்க விரும்பமாட்டீர்கள். பணம் சம்பாத்திக்க சிரந்த வழியை அறிந்தவர் நீங்கள்.

எந்த லட்சியத்தையும் கடுமையான உழப்பால் அடையும் பழக்கம் கொண்டிருப்பீர்கள். உங்களது பொது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களது வாழக்கையை பொறுத்த வரையில் நீங்கள் கடைபிடிக்கும் சட்ட திட்டங்களே உங்களுக்கு முக்கியமாக இருக்கும். இசை மற்றும் கலைகளில் சிறந்த நாட்டம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்கு கற்பிப்பதிலும் சிறந்து விளங்குவீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்: நீங்கள் பிறந்த ஊரிலேயே தங்காமல் பணி நிமித்தமாக பல ஊர்களில் தங்கும்படி நேரும். பார்மசிஸ்ட், இஞ்சிரியரிங், ஆபரணங்கள் தொடர்பான பணி, பல்கலைக்கழகத்தில் உயர் பதவி, ஒரு பிரிவின் தலைவர், வழக்கறிஞர், நீதிபதி, ராணுவம் அல்லது பாதுகாப்பு பிரிவு, தீயணைப்பு ஆபீசர், குழந்தைகள் பாதுகாப்பு யூனிட், ஆதரவற்றோர் இல்லம் பணி, ஆன்மீக குரு அல்லது போதகர், நெருப்பு சம்மந்தமான தொழில் அதாவது பேக்கரி, வெல்டிங், ஆச்சாரி, டைலரிங், செராமிக் உற்பத்தி அல்லது கயொர்லின் பொருட்கள் நெருப்பு தொடர்பான பணிகள் அல்லது கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான பணிகள் உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.

இல்லற வாழ்க்கை: உங்களது மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்களது வாழ்க்கை துணை திறமை வாய்ந்தவராகவும், நேர்மை, பொறுப்பு மற்ரும் குடும்பத்துகேற்ற னல்ல குணங்களை கொண்டிருப்பார். வீட்டில் அற்புதமான சூழல் அமைந்திருந்தாலும் உங்களது வாழக்கை துணையின் உடல் ஆரோக்கியம் கவலைக்குரியதாக இருக்கும். உங்களது வாழக்கை துணை உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பார். காதல் திருமணத்துக்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களது தாயுடன் ஒரு சிறப்பான பிணைப்பு உங்களுக்கு இருக்கும் எனவே உங்களது உடன் பிறந்தவர்களை விட அவர் உங்களிடம் அதிக அன்பு செலுத்துவார். உங்களது 50 வயது முதல் 56 வயது வரை நிறைய போராட்டங்களை வாழ்க்கையில் சந்திக்க நேரும்.

ரோகிணி நட்சத்திர பலன்கள்

மெலிதான உடலும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கவர்ச்சியான தோற்றமும் கொண்ட நீங்கள் அவனைவரையும் கவருவீர்கள். உங்களது கண்கள் வசீகரமாகவும் புன்னகை மனதை மயக்கும்படியாகவும் இருக்கும். உணர்ச்சிகரமான நீங்கள் இயற்கையை பெரிதும் விரும்புவீர்கள். அடக்கமும், பணிவும் மென்மையான குணமும் கொண்டவர் நீங்கள்.

யாரிடம் எப்படி பழக வேண்டும் என உங்களுக்கு நன்றாக தெரியும். மற்றவ்ரகளிடையே பிரபலமானவராகவும் அனைவராலும் விரும்பப்படுபவராகவும் விளங்குவீர்கள். உங்களது திறமையாலும் அழகாலும் எளிதில் அனைவரையும் கவர்வீர்கள். எனவே அனைவரும் உங்களை எளிதில் நம்பிவிடுவார்கள். எனினும், மிகவும் எளிமையானவராகவும், வெளிப்படையாக பேசும் குணத்துடனும் உண்மையாகவும் நடந்து கொள்வீர்கள்.

உங்களது திறமையால் உங்களது குடும்பத்துக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகத்துக்கும் சேவை செய்வீர்கள். உணர்ச்சிகளை சிறப்பாக வெளீப்படுத்தும் உங்களது குணத்தால் நீங்கள் சிறந்த நடிகராக விளங்கும் வாய்ப்புள்ளது. கலாரசிகர் நீங்கள். கற்பனை திறன் வாய்ந்தவர் நீங்கள். மக்களின் கவனத்தை கவர்வதில் சிறந்தவர் நீங்கள். குடும்பம் மற்றும் சமுதாய நியதிகளுக்கு மதிப்பு கொடுத்து நடப்பீர்கள்.

பொறுப்புணர்வுடன் உங்களது லட்சியத்தை நோக்கி செல்வீர்கள். உங்களது நெருங்கிய நண்பர்களின் மகிழ்சிக்கும் திருப்த்திக்கும் மதிப்பளிப்பீர்கள். பாரம்பர்யத்தை விரும்பினாலும் பழைய பஞ்சாங்கமாக இருக்காமல் புதிய சிந்தனைகளையும் மாற்றங்களையும் விரும்புவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதனாலேயே அதிகம் நோய்வாய்ப்படமாட்டீர்கள். நீண்ட ஆயுளை பெற்றிருப்பீர்கள்.

உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதுடன் யாரையும் எளிதில் நம்பிவிடுவீர்கள். எதிர்காலத்தை குறித்து அதிகம் கவலைப்படாமல் நிகழ்காலத்தை ரசித்து வாழவீர்கள். உங்களது வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிரம்பியதாக இருக்கும். அர்ப்பணிப்புடன் எதிலும் செயல்படுவீர்கள். எதையும் பொறுமையுடன் செய்தால் வெற்றி உங்களுக்கே. இளம் வயதில் அதிக போராட்டங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால் 38 வயதுக்கு பிறகு வாழ்க்கை ஒரு நிலைக்கு வரும்.

கல்வி மற்றும் வருமானம்: உழவுத்தொழில், தோட்டக்கலை அல்லது உணவு தொடர்பான விஷயங்களில் லாபம் ஈட்டுவீர்கள். உணவு பதப்படுத்துதல் அல்லது உணவு பொருட்களை மார்க்கெட்டுக்கு போக்குவரத்து செய்தல் போன்ற பணிகள் லாபம் தரும். இது தவிர, தாவரவியல், இசை, கலை, அழகு பொருட்கள், பேஷன், டிசைனிங், அழகு நிலையம், ஆபரணங்கள், விலைமதிப்பான ஆடைகள், டூரிசம், போக்குவரத்து, கார் தொழிற்சாலை, வங்கி, வர்த்தக துறை, எண்ணெய் மற்றும் பெட்ரோல் உற்பத்தி, டெக்ஸ்டைல்ஸ் பிரிவு, நீர் போக்குவரத்து துறை, இரசாயன தொழிற்சாலை, உணவு பொருட்கள், துரித உணவகம், ஹோட்டல், கரும்பு பிசினஸ், இரசாயன இஞ்சினீயரிங், நீர் பதப்படுத்துதல் அல்லது மினரல் வாட்டர் தொடர்பான பணிகள் லாபம் தரும்.

இல்லற வாழ்க்கை: உங்களது வாழ்க்கை துணை அழகானவராகவும், கவர்ச்சியானவராகவும் புத்திசாலியாகவும் இருப்பார். அவருக்கு உங்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புகள் இருக்கும். உங்களை போலவே உணர்ச்சி வசப்படுபவராக இருப்பார். உங்கள் இருவருக்கும் கருத்து ஒற்றுமை அதிகம் இருக்கும். உங்களது குணம் மற்றவர்களை கவரும் வகையிலும் மென்மையாகவும் இருக்கும். அனைவரிடமும் தன்மையாக நடந்து கொள்வீர்கள். இதனாலேயே மற்றவர்கள் உங்களை எடுத்துக்காட்டாக நினைத்து வாழ்வார்கள். உங்களது குடும்பத்தினர் மேல் அக்கறை காட்டுவீர்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து விடுவீர்கள். இதனால் உங்களது குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.

மிருகசீரிஷ நட்சத்திர பலன்கள்

உங்களைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் நீங்கள் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். எதையும் ஆராயும் நோக்கம் உங்களிடம் அதிகம் இருக்கும். ஆன்மீகம், உளவியல் மற்றும் உணர்ச்சிகளை குறித்து மேலும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அறிவு மற்றும் அனுபவத்தை பெறுவதே உங்கள் நோக்கமாக இருக்கும். கூர்மையான புத்தியும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறனும் கொண்டிருப்பீர்கள்.

தன்மையான , அடக்கமான, குதூகலாமான, நட்பான கலகலப்பான குணம் கொண்டவர் நீங்கள். உங்களது மூளையும் மனதும் எப்போதும் சுறுசுறுப்பான குணமும் கொண்டவர் நீங்கள். மக்களை சந்திப்பதிலும் அவர்களுக்கு உதவுவதையும் விரும்புவீர்கள். எளிமையாக வாழ்வதையே உங்களது கொள்கையாக கொண்டிருப்பீர்கள். வாக்குவாதங்களையும், சண்டைகளையும் கருத்து வேற்றுமைகளையும் தவிர்ப்பீர்கள். இதனால் உங்களை கோழை என மற்றவர்கள் நினைக்க கூடும் ஆனால் அது நிஜமல்ல.

உங்களது சிந்தனைகள் நியாயமானதாகவும் பாகுபாடன்றி உண்மையாகவும் இருக்கும். கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் சிறந்து விளங்குவீர்கள். சிறந்த பாடகராக கவிஞராகவும் விளங்க கூடும். கூடுதலாக, நகைச்சுவை உணர்வில் நீங்கள் யாருக்கும் சளைத்தவர் அல்ல. அன்பும் நேசமும்மே வாழக்கையின் அடிப்படைகள் என்பதை அறிந்தவர் நீங்கள். எதையும் லாஜிக்குடன் அணுகுவீர்கள்.

மற்றவர்களிடம் இனிமையாக நடப்பீர்கள் அவர்களும் அப்படியே நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள். ஆனால் துரதிஷடவசமாக அப்படி நடக்காது. நன்பர்கள், பார்ட்னர்கள் மற்றும் உறவினர்களிடம் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும். தலைமை பண்புகள் நிறைந்திருக்கும் உங்களிடம். எல்லா விஷயத்தையும் திட்டமிட்டு தொடங்கி சிக்கல்களை சரி செய்வீர்கள்.

கல்வி மற்றும் வருவாய்: நல்ல கல்வியை பெற்றிருப்பீர்கள். பணத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென பிறருக்கு சொல்வீர்கள். ஆனால் உங்களது செலவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. சில நேரங்களில் உங்களை பொருளாதார பிரச்சினைகள் சூழும். நீங்கள் ஒரு சிறந்த பாடகராக, இசை கலைஞராக, ஆர்டிஸ்டாக, கவிஞராக, மொழி விற்பன்னராக, நாவலாசிரிரியராக, எழுத்தாளராக அல்லது சிந்தனையாளராக இருக்க கூடும். வீடு, ரோடு, மேம்பாலம் கட்டுமானம்,கருவிகள் செய்தல், டெக்ஸ்டைல் அல்லது ஆடை தொழிற்சாலை, ஆராய்சி தொடர்பான பிரிவுகள்; இயற்பியல். வான சாஸ்திரம். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் ஆகியவை லாபம் தரும்.

இல்லற வாழ்க்கை: பொதுவாக உங்களது திருமண வாழ்வு இனிமையாக இருக்கும். ஆனால் உங்களது வாழ்க்கை துணைக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். திருமண வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்க, நீங்கள் பிடிவாதத்தையும் சந்தேக குணத்தையும் கைவிட வேண்டும். அப்போது தான் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் குறை காணாமல் இருந்தால் சிவனும் பார்வதியும் போல சிறந்த தம்பதிகளாக இருப்பீர்கள். 32 வயது வரை, வாழ்க்கையில் சோதனைகளை சந்திப்பீர்கள். அதன் பிறகு வாழ்க்கை ஒரு நிலைக்கு வரும். 33 வயது முதல் 50 வயது வரை உங்களது காலம் சாதகமாக இருக்கும். வெற்றிகளை தரும்.

திருவாதிரை நட்சத்திர பலன்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களான நீங்கள், பொறுப்புணர்வு மிக்கவராகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பீர்கள். உங்களது நட்சத்திரத்தின் அதிபதியால் நீங்கள் மிக சிறந்த அறிவாளியாக இருப்பீர்கள். ராகு ஆராய்சிக்கு அதிபதி. உங்களிடம் எதை பற்றியும் அறிந்து கொள்ளும் அறிவு தாகம் நிறைந்திருக்கும். கலகலப்பான குணம் கொண்ட னீங்கள் அனைவரிடமும் நாகரீகமாக பழகுவீர்கள்.

நீங்கள் அனைத்து வேலைகளிலும் சிறந்து விளங்குபவர் ஆதலால், ஆராய்சி முதல் பிசினஸ் வரை அனைத்திலும் வெற்றி கிட்டும். மற்றவரை எளிதில் எடை போட்டுவிடுவீர்கள். எனவே எதையும் முன்கூட்டியே கணிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். உங்களது அனுபவங்களை சோதனைகளாக மற்றவர்களுக்கு விளக்க தயங்க மாட்டீர்கள். வெளியே பார்க்க அமைதியானவராக இருந்தாலும் உங்களது மனதில் சூறாவளியாக எண்ணங்கள் சுழன்று கொண்டிருக்கும்.

உங்களது கோபத்தை அடக்க வேண்டியது அவசியம். சூழ்நிலைகள் உங்களை சோதனை செய்தாலும் உங்களை உடைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வீர்கள். இதனாலே நீங்கள் அனுபவமும் முதிர்ச்சியும் கொண்டவராக விளங்குவீர்கள். பிரச்சினைகள் குறித்து தீர யோசித்த பிறகு அதனை தீர்ப்பதற்கான வழிகளை கண்டறிவீர்கள். பலமான உடலமைப்பு பெற்றிருப்பீர்கள்.

ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். பன்முக திறங்களை கொண்டிருப்பது உங்களது மற்றொரு சிறப்பம்சமாகும். ஏன் எப்படி என்ற சட்டதிட்டங்களின்படி செயல்பட்டு தீராத மர்மங்களையும் தீர்ப்பீர்கள். பணம் சம்பாதிக்க உங்களது சொந்த ஊரிலிருந்து தள்ளி வாழ்வீர்கள். சுருக்கமாக சொன்னால் வெளிநாட்டில் வேலை செய்வீர்கள். 32 வயது முதல் 42 வயது வரை உங்களுக்கு சிறப்பான காலகட்டமாகும்.

கல்வி மற்றும் வருமானம்: எலக்டிரிக்கல் இஞ்சினியரிங், ஜோதிடம் அல்லது சைக்காலஜியில் கல்வி கற்றிருப்பீர்கள். எலக்டிரிக்கல் இஞ்சினியரிங் அல்லது கம்பியூட்டர் தொடர்பான பணி, ஆங்கில மொழிபெயர்ப்பு, புகைப்படக்கலை, இயற்பியல் அல்லது கணிதம் கற்பித்தல், ஆராய்ச்சி அல்லது அது தொடர்பான பணி, தத்துவவியல், நாவல் எழுதுதல், நஞ்சுகள் தொடர்பான மருத்துவம், பார்மசிட்டிகல், கண் மற்றும் மூளை தொடர்பான நோய்களை கண்டறிதல், போக்குவரத்து, கருத்து பரிமாற்ற பிரிவு. சைக்கியாட்டரி பிரிவு, துப்பு துலக்குதல், துரிஷ உணவு மற்றும் பானங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவராக இருக்கலாம்.

இல்லற வாழ்க்கை: சிறிது தாமதமாக உங்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அழகான இல்லற வாழ்வுக்கு வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்களது பணி அல்லது பிசினஸ் நிமித்தமாக குடும்பத்தை விட்டு தள்ளி இருக்க வேண்டிய சூழல் அமையலாம். உங்களது வாழ்க்கை தூனை உங்களை நன்றாக கவனித்து கொள்வார். அவர் குடும்ப வேலைகளை திறமையுடன் கையாள்பவராக இருப்பார்.

புனர்பூசம் நட்சத்திர பலன்கள்

நேர்மையான, திருப்தியான மற்றும் நிறைவான குணம் கொண்டவர் நீங்கள். உங்களை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் “எளிமையான வாழ்வு மற்றும் உயர்வான சிந்தனை” என கூறலாம். கடவுள் பக்தி, பழமையான விஷயங்களில் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை கடைபிடிக்க விரும்புவீர்கள். பணத்தை சேமித்தல் உங்களால் இயலாத விஷயம்.

ஆனால் வாழ்கையில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். உங்களது ஒளிவு மறைவற்ற வெளிப்படையான குணம் உங்களை மற்றவர்கள் மத்தியில் பிரபலமாக்கும். ஏழை எளியவர்களுக்கு எப்போதும் உதவுவீர்கள். உங்களது ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும் என்பதால் முறையற்ற நியாயம் இல்லாத செயல்களுக்கு எப்போதும் துணை போக மாட்டீர்கள்.எதிர் மறையான எண்ணங்களில் இருந்து தள்ளியே இருப்பீர்கள்.

மற்றவர்களை சமாதானப்படுத்துவதும் அமைதியடைய செய்வதும் உங்களது சிறப்பான குணம். உங்களது சாதுவான குணம், கருணை மற்றும் அன்பான செயல்கள் உங்களது தோற்ற அழகை மேலும் அதிகரிக்கும். அமைதியான, உண்மையான நேர்மையை விரும்பும் கட்டுப்பாடான குணம் மற்றவர்களை கவரும். மற்றவர்களை கையாளுதல் மற்றும் நட்பு பாராட்டுதல் போன்ற குணங்கள் உங்களுக்கு புகழை சம்பாதித்து தரும். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதற்காக தேவையற்ற ஆபத்துகளை சந்திக்கமாட்டீர்கள்.

கடவுளின் அருளால் அது தானாகவே விலகிவிடும். உங்களது குடும்பத்தை மிகவும் நேசிப்பீர்கள். சமுதாய நலனுக்காக அதிக பிரயாணம் செய்வீர்கள். வில்லாளி தனது குறிக்கோளை நோக்கி தனது முழு கவனத்தையும் செலுத்துவது போல உங்களது குறிக்கோளின் மேல் முழு கவனம் செலுத்துவீர்கள். முயற்சிகளில் தோல்வியடையாமல் மேலும் முயன்று வெற்றி காண்பீர்கள்.

பன்முக திறன் கொண்ட நீங்கள் எதையும் சரியாக செய்து முடிப்பீர்கள். உங்களது பெற்றோரையும் பெரியோர்களையும் மிகவும் மதிப்பீர்கள். அமைதியை விரும்புபவராகவும், யதார்த்தமாக எதையும் நேர்மையுடன் அணுகுபவராகவும் இருப்பீர்கள். உங்களது குழந்தைகளும் அனைவருடனும் நன்றாக பழகுவார்கள்.

கல்வி மற்றும் வருமானம்: ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், மருத்துவர் போன்ற துறைகளில் ஈடுபட்டு புகழடைவீர்கள். எழுத்து, ஜோதிடம், இலக்கணம், யோகா ஆசிரியர், பயணம் மற்றும் டூரிசம் பிரிவுகளில்,ஹோட்டல்-ரெஸ்டாரன்ட் தொடர்பான பணிகள், மத போதகர், பண்டிதர், வெளிநாட்டு வாணிபம், புராதான பொருட்கள் விற்பனை, போஸ்டல் மற்றும் கூரியர் சேவைகள, சமூக சேவை போன்ற துறைகள் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

இல்லற வாழ்க்கை: பெற்றோருக்கும் ஆசியருக்கும் மதிப்பு கொடுத்து நடப்பீர்கள்.உங்களது திருமண வாழ்வில் சில சிக்கல்கள் தோன்றலாம். எனவே உங்களது வாழக்கை துணையுடன் ஒத்துப்போவது நல்லது. மனதளவில் அல்லது உடல் நலனில் சில பிரச்சினைகளை உங்களது வாழ்க்கை துணை சந்திக்ககூடும்.

ஆனால் அவர் திறமையானவராகவும் மனம் மயக்கும் தோற்றம் கொண்டவராகவும் இருக்கலாம். உங்களது வாழ்க்கை துணையும் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பவராக இருப்பார். அவர் குடும்பத்தையும் குழந்தைகளையும் சிறப்பாக கவனித்து கொள்வார்.

பூசம் நட்சத்திர பலன்கள்

கருணையுள்ளம், இரக்க குணம் கொண்ட தாராள குணம் படைத்தவர் நீங்கள். உங்களது நட்சத்திர அதிபதியான குருவின் நீங்கள் உண்மை, நேர்மை, நியாய குணம் படைத்தவராக இருப்பீர்கள்,. கட்டுமஸ்தான உடல் வலு கொண்டிருப்பீர்கள். உருண்டையான மற்றும் பொலிவான முகம் படைத்தவர் நீங்கள். உங்களிடம் ஈகோ என்பது சிறிதளவு கூட இருக்காது.

வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் ஆசீர்வாதமும் பெற்ரிருக்க விரும்புவீர்கள். அர்பணிப்பு, நம்பகம், சமுதாய அக்கறையுடன் மற்றவருக்கு உதவுதல் ஆகிய குணக்களை கொண்டவர் நீங்கள், சுவையான உணவுகளுக்கு எளிதில் மயங்குவீர்கள். வாழ்வில் சிறி சிறு இன்பங்களை விரும்புவீர்கள். பாராட்டுக்கு மயங்குவீர்கள் அதே நேரத்தில் கிண்டல்களை தாங்கிக்கொள்ள மாட்டீர்கள்.

எனவே உங்களிடம் காரியம் சாதிக்க இனிப்பாக பேசினாலே போதும். வாழ்க்கையில் அத்தனை வசதிகளையும் பெறுவீர்கள். கடவுள் நம்பிக்கை அதிக கொண்டிருப்பீர்கள். உங்களது இந்த குணங்களால் மற்றவர்கள் மத்தியில் புகழடைவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் மற்றும் தாராள குணம் கொண்டிருப்பீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.

தாயின் மீதும் தாய்குலங்களின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருப்பீர்கள். நீங்கள் வேலை செய்யும் பாணி அலாதியானது. `பிறப்பிலேயே திறமைகளை கொண்டவர் நீங்கள். உங்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் அதை எப்படியாவது அர்பணிப்புடன் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக உங்களது வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளை விட்டு தள்ளி இருக்க நேரலாம். ஆனால் இதனால் இங்களது குடும்ப வாழ்வில் எந்த பாதிப்பும் நேராது.

வாழ்க்கையில் நல்ல வசதிகளை அடைய உழைப்பீர்கள். அமைதியான மற்றும் ஒழுக்கமான குணம் கொண்ட நீங்கள் மற்றவர்களின் முறையற்ற செயல்களால் சில நேரங்களில் பாதிக்கப்படலாம். உங்கள் மனதில் இருப்பதை வார்த்தைகளாக கூறுவதில் சிரமப்படுவீர்கள்.

கடவுள் நம்பிக்கை கொண்ட நீங்கள் அனைவருக்கும் உதவுவீர்கள். திருமண வாழ்க்கையிலும் உங்களது துணையிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள்.. இதனால் சில நேரங்களில் கருத்து வேற்றுமைகள் தோன்றலாம். இதனால் உங்களது மனது காயப்படக்கூடும்.

கல்வி மற்றும் வருமானம்: நாடகம், கலை, வர்த்தகம் தொடர்பான பிசினஸ் லாபம் தரும். அத்துடன், பால் பொருட்கள், விவசாயம், தோட்டக்கலை, விலங்குகள் வளர்த்தல், உணவுப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல், அரசியல், பாராளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர், மத போதகர், கவுன்சிலர், சைக்காலஜிஸ்ட், தன்னார்வ தொண்டர், ஆசிரியர், பயிற்சியாளர், குழந்தைகள் காப்பகம், பிளே ஸ்கூல், வீடு, டவுன்ஷிப் அல்லது சொசைட்டி கட்டுபவர், மத தொடர்பான நிகழ்ச்சிகள் அல்லது சமுதாய நிகழ்ச்சிகளை நிர்வகிப்பவர், சமூக சேவை, போக்குவரத்து போன்ற கடின பணிகளில் ஈடுபட்டிருப்பீர்கள்.

இல்லற வாழ்க்கை: வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுடன் எப்போதும் சேர்ந்து வாழ விரும்புவீர்கள், ஆனால் பணி மற்றும் பிசினஸ் நிமித்தமாக அவர்களை விட்டு அடிக்கடி தள்ளி செல்லும் சூழல் தோன்றும். இதனால் உங்களது திருமண வாழ்வில் சலசலப்புகள் ஏற்படலாம். எனினும், நீங்கள் இல்லாத போது உங்களது வாழ்க்கை துணை அர்ப்பணிப்புடன் குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவார். 33 வயது வரை சில போராட்டங்களை வாழ்க்கையில் சந்திப்பீர்கள். அதன் பிறகு நீங்கள் எல்லா திசையிலும் வளர்ச்சி காண்பீர்கள்.

ஆயில்ய நட்சத்திர பலன்கள்

மிகுந்த அதிர்ஷ்டசாலியான நீங்கள் வலுவான உடலை கொண்டிருப்பீர்கள். உங்களது பேச்சு அனைவரையும் மயக்கி கட்டிப்போடும் திறன் வாய்ந்தது. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மணிக் கணக்கில் பேசும் திறன் கொண்டவர் நீங்கள். சதுர வடிவ முகமும் சிறிய கரங்களும் கொண்ட அம்சமான முகவெட்டை கொண்டிருப்பீர்கள். உங்களது புத்திசாலித்தனம் மற்றும் தலைமை பண்புகள் உங்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். உங்களது முகத்தில் ஒரு மச்சமோ அல்லது தழும்போ இருக்கும்.

உங்களது சுதந்திரத்தில் யாரும் தலையிடுவதை விரும்பமாட்டீர்கள். எனவே உங்களுடன் பேசும்போது உங்களது கருத்துக்கு மறுப்பாக மற்றவர்கள் எதுவும் கூறாமல் இருப்பது அவருக்கு நல்லது. உங்களது நண்பர்களுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்க கூடிய நிலை ஏற்படும். அத்தகைய சூழலில் அவர்களுடன் உங்களது உறவு பாதிக்கப்படும்.

உங்களது முன் கோப குணமும் உங்களுக்கு எதிராக மற்ரவர்களை செயல்பட தூண்டும். எனவே அதை கட்டுப்படுத்துவது நல்லது. பொதுவாக நட்பாண குணமும் சகஜமாக அனைவரிடம் பழகும் தன்மையும் கொண்டிருப்பீர்கள். யாரையும் எளிதாக நம்பிவிட மாட்டீர்கள். எனவே மற்ரவர்கள் உங்களை ஏமாற்றுவது கடினம். எந்த பிரச்சினையையும் முன்கூட்டியே அறிந்து கொள்வீர்கள். எனவே அதனை சந்திக்க தயாராகிவிடுவீர்கள்.

சுவையான உணவுகளை ரசித்து உண்பீர்கள் ஆனால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளில் இருந்து தள்ளியே இருப்பது நல்லது. எப்போதும் உங்களது மனம் எதையாவது சிந்தித்தபடியே இருக்கும். மர்மமான முறையில் செயல்படுவதை விரும்புவீர்கள். உங்களது வார்த்தைகளால் மற்றவர்களை கட்டிப்போடும் திறன் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அரசியலில் ஈடுபடுபவராக இருந்தால் இந்த திறன் உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும்.

அதிக உயரம் செல்வதற்கான தலைமை பண்புகள் கொண்டிருப்பீர்கள். கடின உழைப்பை நம்பாமல் திறமையாக பணியாற்றுவதையே நம்புவீர்கள். உங்களுக்கு லாபம் உள்ளவரை ஒருவரிடம் நட்பு பாராட்டுவீர்கள். மற்றவர்களை மதிப்பிடுவதில் திறமை வாய்ந்த உங்களுக்கு அவர்களை தக்க சமயத்தில் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவும் தெரியும்.

ஒரு விஷயத்தை பற்றி முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் அதை எப்படியும் செயல்படுத்தி விடுவீர்கள். மேலும், நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளராகவும் கலைஞராகவும் திகழ்வீர்கள். பேச ஆரம்பித்துவிட்டால் நீங்கள் நினைப்பதை சொல்லி முடிக்கும் வரையில் பேச்சை நிறுத்தமாட்டீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்: சிறந்த எழுத்தாளர் நீங்கள். நடிப்பு துறையில் நீங்கள் நுழைந்தால் சிறந்த நடிகராக பெயர்ரெடுக்க முடியும். கலை மற்றும் வர்த்தக துறையும் உங்களுக்கு கைகொடுக்கும். பிசினசில் லாபம் சம்பாதிப்பீர்கள். ஒரே வேலையில் அதிக காலம் நீடிக்கமாட்டீர்கள். ஒரு இடத்தில் வேலை செய்தாலும் தனியாக ஒரு தொழிலையும் செய்து வருவீர்கள். பொருளாதார ரீதியாக செல்வ வளத்துடன் வாழ்வீர்கள்.

உங்களுக்கு சாதகமான தொழில்கள் நஞ்சு தொடர்பான தொழில், பெட் ரோலிய தொழிற்சாலை, இராசயனவியல், சிகரெட் மற்றும் புகையிலை தொடர்பான பிசினஸ், யோகா பயிற்சியளித்தல், சைக்காலஜிஸ்ட், இலக்கியம், கலை மற்றும் பிரயாணம் தொடர்பான பணிகம், பத்திரிக்கை, எழுத்து, டைப்பிங், ஜவுளி உற்பத்தி, நர்சிங், ஸ்டேஷனரி பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்றவை.

இல்லற வாழ்க்கை: யார் உங்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் உங்களது சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்களது குடும்பத்தின் மூத்த பிள்ளையாக நீங்கள் இருப்பீர்கள். எனவே குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமப்பீர்கள். உங்களது வாழ்க்கை துணையின் குறைகளை கண்டும் காணாமல் விடுவது நல்லது. இல்லையென்றால் கருத்து வேற்றுமைகள் தோன்றலாம். உங்களது குணமும் நல்ல பழக்க வழக்கங்களும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். நீங்கள் இந்த நட்சத்திரத்தின் கடைசி பாதத்தில் பிறந்தவராக இருந்தால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.

நட்சத்திர பலன்களை அடுத்த பதிப்பில் எதிர்பாருங்கள்.