இரு வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி!

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் மரதடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை, புலோலி வடக்கு பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போதி விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பலாங்கொட, தெல்வின்ன பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.