21 வயதான பெண்னுடன் சிக்கிய இரு ஆண்கள்!

கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம – தலவத்துகொட பிரதேசத்தில் சுமார் 5 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த 25 வயதானவர் என தெரியவந்துள்ளது. இதேவேளை மினுவாங்கொட – கட்டுவெல்லேகம பகுதியில் 7 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவரும், இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் நேற்றைய தினம் மோட்டார் வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை கொண்டு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர். 26 மற்றும் 37 வயதான இரண்டு ஆண்களும் யக்கவில பகுதியை சேர்ந்தவர்களுடன், 21 வயதான யுவதி மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது