மோசமான நிலையில்​ ​வீதிகள் : பாரபட்சம் காட்டுகின்றதா வவுனியா வடக்கு பிரதேச சபை!

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீரிசுட்டான் துவரங்குளம் வீதி மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது.

இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து நீண்ட நாட்களாகியும் குறிப்பாக மண் போடப்பட்டு ஒரு மாதகாலத்திற்க்கு மேலாகியும் இன்னும் பரவாத நிலையில் காணப்படுகின்றது.

மேலும் இவ்வீதியானது பட்டிக்குடியிருப்பை இணைக்கும் வீதியாக விளங்குகின்றது. இப்பாதையில் நாளாந்தம் பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்கின்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை ஏதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வயோதிபர், பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் தமது அன்றாட கடமைகளுக்கு நீண்ட துாரம் சுற்றி பயணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அத்துடன் பாலங்கள் மிக உயரமாகவும் ஆபத்து நிறைந்தனவாகவும் காணப்படுகின்றது. இனிவரும் காலங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொண்டு இவ்வீதியினை மிக விரைவாக செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள், பொதுஅமைப்புகள் வினையமாக வேண்டி நிற்கின்றனர்.

முல்லை நியூஸ் செய்திகளுக்காக நெடுங்கேணி நிருபர்.