இலங்கையில் நடந்த பயங்கரம்! பிறந்து 08 நாட்களான குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி!

பிறந்து 08 நாட்களான குழந்தை ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் படி, மீரிகம – திவுலப்பிட்டிய வீதியில் விகாரை ஒன்றுக்கு அருகில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு அற்று இருந்த குழந்தை மீரிகம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோரை கண்டறிவதற்காக மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.