மாவீரர் நினைவு தின நிகழ்வு தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட அதிர்ச்சிகர அறிவிப்பு!

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடத்துவது குறித்து, அரசாங்கத்தால், எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லையென, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெல, ​இன்று (24) தெரிவித்தார்.

அத்துடன், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையுமில்லையென மேலும் அவர் குறிப்பிட்டார்.