யாழில் காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு!பிரபல பாடசாலை மாணவி தற்கொலை!

வீட்டில் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பதை வெளிநாட்டில் உள்ள சகோதரன் கண்டித்துள்ளதாக கூறி மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் அராலி தெற்கு வட்டுக்கோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் சாரு (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த மாணவி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் அவர் கல்வி கற்று வருபவர் ஆவார். மாணவியின் சடலத்துக்கு அண்மையில் கடிதம் ஒன்று மீட்கப்பட்டது.

போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை நடத்தி சடலத்தை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த மாணவி தனக்கு கல்வி கற்பித்த ஒருவரை காதலித்து வந்ததாகவும் அதற்கு வெளிநாட்டில் உள்ள அண்ணன் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அதனையடுத்தே மாணவி துாக்கில் தொங்கியதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.