யாழில் பிக்கு செய்த காரியம்! மடக்கி பிடித்த பொலிசார்!

யாழில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்கு ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாட்டி படை முகாமில் உள்ள கடற்படையினர் இருவர் நேற்று அதிகாலை யாழ் நகர் பகுதியில் உள்ள கடைக்கு சென்றபோது, அங்கு நின்ற பிக்கு ஒருவர் கத்தி ஒன்றினால் சிப்பாய் ஒருவரின் முகத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக காயமடைந்த கடற்படை சிப்பாய் யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த பிக்கு அப்பகுதியில் சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் வாகனங்களின் மீது கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , பொலிசார் குறித்த பிக்குவை கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த பிக்கு மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.