சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை வீடமைப்பு மற்றும் சமூக நல அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவங்ச மேற்கொண்டுள்ளார்.

இதன் கீழ் நீண்டகாலமாக முறையாக நியமனம் கிடைக்காமல் பணியாற்றும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளது.

இவ்வருட இறுதிக்கு முன்னர், இந்த நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)