மைத்திரிபால சிறிசேன மிகவும் ஆபத்தானவர்: பிரபல நடிகை குற்றச்சாட்டு!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகவும் ஆபத்தானவர் என பிரபல நடிகை சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் கலைஞர்களாக ஒன்றையும் எதிர்பார்க்காமல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக வேலை செய்தோம். இந்த அனைத்தையும் ஜனாதிபதி காட்டிக்கொடுத்திருப்பது வருத்தமாக உள்ளது. அவரது நடவடிக்கை நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்று சமனலி பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

சுத்தமான அரசியல் ஒன்றை மேற்கொள்பவர் என்ற எண்ணத்தில் நாங்கள் மைத்ரியை அதிகாரத்திற்கு கொண்டு வரவில்லை. எனினும் சில மாற்றங்களை பொதுமக்களின் அழுத்தங்களுக்காக செய்வார் என ஏதிர்பார்த்தோம்.

மகிந்த ராஜபக்சவின் கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய முடியும் என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது. எனினும் இந்த நேரத்தில் மைத்ரிபால சிறிசேன என்பவர் மகிந்த ராஜபக்சவை விட ஆபத்தானவராகியுள்ளார்.

அண்மையில் பாதுகாப்பு பிரிவு பிரதானி ஒருவருக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த சம்பவம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். என மேலும் அவர் தெரிவித்தார்.

அனைத்திலும் உள்ள ஆபத்து மக்களுக்கு புரிகிறதா என தெரியவில்லை இந்த அரசியல் ஆபத்து வேறு விதத்தில் உள்ளது. அப்படியிருப்பினும் ஜக்கிய தேசியக் கட்சியும் கடந்த காலங்களில் தங்களுக்கு கிடைத்த மக்கள் பலத்தை வீணடித்து விட்டார்கள் என்றே கூறவேண்டும்.

ஜனாதிபதியை தனிமைப்படுத்தவும் அவர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள். எனினும் ஜனாதிபதியின் காட்டிக் கொடுப்பை நியாயப்படுத்த இதனை கூறவில்லை அடுத்த தரப்பும் சுத்தம் இல்லை என்பதனை நினைவுபடுத்துகிறேன் என மேலும் அவர் தெரிவித்தார்.