40 வருட நண்பனை இழந்துவிட்டேன்! விம்மி விம்மி அழுத ரஜினி!

மறைந்த நடிகர் அம்பரீஷுக்கு அஞ்சலி செலுத்திய போது நடிகர் ரஜினிகாந்த் உடைந்து அழுதுள்ளார்.

நெடுநாள் நண்பனை இழந்த வருத்தத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடைந்து அழுதார். மிகவும் புகழ்பெற்ற கன்னட நடிகரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் பெங்களூருவில் நேற்று காலமானார்.

கன்னட திரையுலகில் மிகவும் புகழ் பெற்ற நடிகர் அம்பரீஷ். கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அம்பரீஷ், நேற்று பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.

ரஜினிகாந்த் அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலையிலேயே பெங்களூர் சென்றார். விமானம் மூலம் அவர் பெங்களூர் விரைந்தார். பெங்களூரில் அம்பரீஷ் இல்லத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அம்பரீஷ் இல்லத்தில் ரஜினி அஞ்சலி செலுத்தினார். அம்பரீஷ் மனைவியும் நடிகையுமான சுமலதாவிற்கு ஆறுதலாக பேசினார். ரஜினியை பார்த்ததும் சுமலதா உடைந்து அழுதார்.

இதையடுத்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத ரஜினியும் அழுதார். சுமலதா மீது சாய்ந்து ரஜினி உடைந்து அழுதார். ரஜினி அழுததை பார்த்து அங்கிருந்தவர்களுக்கு கண்ணீர் விட தொடங்கினர்.

அதன்பின் பேட்டியளித்த ரஜினி ”நான் என் 40 வருட நண்பனை இழந்துவிட்டேன். எப்போது பெங்களூர் வந்தாலும் இங்குதான் அவர் வீட்டில்தான் தங்குவேன்.

அவருடன்தான் சாப்பிடுவேன். இப்போது அவர் இல்லை என்று நினைக்கும் போதே அதை தாங்கி கொள்ள முடியவில்லை” என்றும் கூறிவிட்டு ரஜினி மீண்டும் உடைந்து அழுதார்.