இலங்கையில் சிக்னனில் காத்திருந்த இளைஞனிற்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி வீடியோ

குளியாப்பிட்டி – ஹெட்டிபொல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதி சமிஞ்சை நிறுத்தத்தில் காத்திருந்த உந்துருளி செலுத்துனர் மீது பின்னால் அதிக வேகத்தில் வந்த வேன் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது , உந்துருளி செலுத்துனரின் தலை மீது வேனின் சில்லுகள் ஏறியுள்ளதை தொடர்ந்து அவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட வேன் வாகனத்தின் சாரதி குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நிகவரெடிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரொருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.