தந்தையை அடித்து கொன்ற மகன் (படங்கள்)

நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காசல்ரீ பகுதியில் தந்தையை தடியால் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் நேற்று (27) இரவு 7.30 மணி அளவில் பதிவாகியுள்ளதாக காசல்ரீ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மகன் மனநோயாளி எனவும் மகனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணபட்டமையினால் தந்தை நோட்டன்பிரிஜ் பொலிஸ் நிலையத்தில் தனது மகன் மீது முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், ஆத்திரம் அடைந்த மகன் வீட்டில் தனது தந்தை தனிமையில் இருந்த வேளை, தந்தையின் தலை பகுதியை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யபட்டவர் 4 பிள்ளைகளின் தந்தையான 76 வயதுடைய ஏ.ஜீ. ஜயநந்த என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மகன் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளுக்காக ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கபட்டு மரண விசாணைகள் நிறைவடைந்தவுடன் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதணைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர் இன்று (28) ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோட்டன்பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.