யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல் ; எட்டு பேர் கொண்ட கும்பல் அடாவடி!

யாழ்ப்பாணம் வைமன் வீதியில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வீட்டில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஆரியகுளம் சந்தியில் வாகானம் திருத்தும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு முச்சக்கரவண்டிகள் எரிந்து சேதமாகியுள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் வாளால் வெட்டப்பட்டும், வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும் காணப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

எனினும் இந்த சம்வத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து தனக்கு எவ்வித தகவல்களும் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.