இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.

அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திால் விநியோகிக்கப்படுகின்ற அனைத்து வகையான பெற்றோல் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 140 ரூபாவில் இருந்து 135 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 167 ரூபாவில் இருந்து 162 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 111 ரூபாவில் இருந்து 106 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 136 ரூபாவில் இருந்து 131 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மண்ணெண்ணெய் விலையில் எந்தவிதமான மாற்றம் இல்லை என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.