முல்லைத்தீவில் 13 வயது சிறுவன் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு, செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் 13 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை சீரூடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படும் தகவல் கிடைத்ததை உறுதிசெய்துள்ள முல்லைத்தீவு காவல்துறையினர், மரண விசாரணை அதிகாரியுடன் சம்பவ இடத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் 13 வயது சிறுவனின் தற்கொலைக்கான காரணம் அறியப்படவில்லை. மேலதிக விசாரனையினை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.