இலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்!

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை சரணடைந்துள்ளார்.மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிசார் இடையூறு விளைவித்தமைக்கு பழிவாங்குவதற்காக இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவர் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் சிஐடியிடம் பொலிசார் பாரப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.