சற்று முன் மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை இராஜ, பிரதி அமைச்சர்களை குறித்த பதவியில் இருந்து இடைநீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த இடைக்காலத்தடையுத்தரவு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , பிரதமர் உள்ளிட்ட 49 அமைச்சரவை அமைச்சர்களையும் எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றினால் அழைப்பாணை வௌியிடப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான, நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் தலைமையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

குறித்த மனு கடந்த 23ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பம் இடப்பட்ட நிலையில், தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.