அடுத்த பிரதமர் இவரா? ஜனாதிபதியால் தெரிவு செய்யப்படவுள்ள புதிய பிரதமர்!

ஜனாதிபதியினால் இன்றைய தினம் மற்றுமொரு பிரதமரை நியமிக்ககூடிய நிலைமை காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பாண்டார இதனை தெரிவித்துள்ளார். அதிகாரமற்ற பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

அவர், டளஸ் அழகப்பெருமவாகவோ, ஜோன் செனவிரட்னவாகவோ அல்லது ஜனக பண்டார தென்னகோனாகவோ இருக்கலாம் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.