இன்றைய ராசிபலன் 06.12.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்
முடியுமானால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதால், பயணம் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். மத இடம் செல்வது அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் அன்புக்குரியவரின் வருத்தத்திற்கு உங்களின் புன்னகைதான் அருமருந்தாக அமையும். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்.

ரிஷபம்
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் – அது வேலையில் கவனத்தை பாதிக்கும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். மாலையில் எதிர்பாராத விருந்தினர்கள் உங்கள் இடத்தில் கூட்டமாக சேருவார்கள். உங்கள் மனதிற்கினியவரை சந்திப்பீர்கள் என்பதால் மனதில் ரொமான்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கும். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.

மிதுனம்
மத உணர்வுகள் தோன்றி, புனிதமானவரிடம் இருந்து தெய்வீக அறிவைப் பெற வழிபாட்டு இடத்திற்குச் செல்வீர்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும்.

கடகம்
இன்று உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான உறவை ஊக்குவித்திடுங்கள். கடந்த காலத்தை மறந்திடுங்கள். பிரகாசமான மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் காணுங்கள். உங்கள் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் – ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் – உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். அபீசில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.

சிம்மம்
தாமதமாக ஓவர்டைம் வேலை பார்க்கும் சிலர், சக்தி குறைந்திருப்பீர்கள் – இன்று கடைசியாக உங்களுக்கு இருப்பது ஊசலாட்டமும் அழுத்தம் நிறைந்த நாளும்தான். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். வேலையில் இன்று மிக அருமையான நாளாகவே இருக்கும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். தேவையில்லாத காரணத்துக்காக இண்ரு உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.

கன்னி
சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். இந்த நாளை கவனமாக தி்ட்டமிடுங்கள் – உங்களுக்கு நம்பகமானவர்களுடன் பேசி உதவி பெறுங்கள். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் – உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணை உங்கள் மேல் சந்தேகம் கொள்ளும்படியான சூழல் இன்று அமையக்கூடும்.ஆனால் இறுதியில் உங்கள் துணைவர்/துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார்.

துலாம்
உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள். ஆனால் உங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான வழியை பயன்படுத்துங்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, மற்ற எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் இறுதி வடிவத்துக்கு வரும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.

விருச்சிகம்
உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம்.

தனுசு
குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. இன்று நீங்கள் பணிவாகவும் உதவிகரமாகவும் இருந்தால் உங்கள் பார்ட்னர்களிடம் இருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும்.

மகரம்
ஆரோக்கியத்தைப் பொருத்தவரை இது டல்லான காலம். எனவே என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். பழைய நண்பர் ஒருவர் உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. உங்கள் வேலையில் திறமையை அதிகரிக்க புதிய டெக்னிக்குகள் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள், உங்களுடைய ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

கும்பம்
உங்களின் நீடித்த நோயை குணமாக்க புன்னகை சிகிச்சையைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் அருமருந்து. நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். சோஷியல் மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேடஸ்களை பாருங்கள். உங்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் இன்று காத்திருக்கிறது. இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று, உங்கள் வாழ்க்கை துணை கற்கண்டை விட இனிமையானவர் என்று உணருவீர்கள்.

மீனம்
உங்களை பிட்டாகவும் நன்றாகவும் வைத்துக் கொள்ள அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். உங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் – உங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. உங்களது நற்செய்கைகளுக்காக வேலையில் இன்று நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் திருமண வாழ்வில் மிகவும் சாதகமான நாள்.