இன்றைய ராசிபலன் 08.12.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்: உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

ஒருவர் உங்களைப் பாராட்டுவார். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். சண்டையும் செக்சும் மட்டுமே திருமண வாழ்க்கை என சிலர் நினைக்கலாம். ஆனால் இன்று அனைதுமே உங்களை பொறுத்தமட்டில் இனிமை தான்.

ரிஷபம்: ஆன்மிகவாதி ஒருவர் ஆசிர்வாதம் தந்து மன அமைதியை ஏற்படுத்துவார். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உங்கள் சாதனை உங்கள் குடும்பத்தினரின் உற்சாகத்தை அதிகரிக்கும். ஏனென்றால் உங்கள் நற்பெயருக்கு நீங்கள் மேலும் பெருமை சேர்க்கிறீர்கள். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க கடினமாக உழைத்திடுங்கள்.

உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து பரிசு / அன்பளிப்பு பெறுவதால் உற்சாகமான நாள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணையின் அன்புக்காக ஏங்குகிறீர்கள் என்றால் அது இன்று அபரிமிதமாக கிடைக்கும்.

மிதுனம்: அதிக உற்சாகமாக இருந்தாலும், இன்று உங்களுடன் இருக்க முடியாமல் போனவருக்காக வருந்துவீர்கள். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். பயணம் ரொமாண்டிக் தொடர்பை வளர்க்கும்.

இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம்! காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள்.

கடகம்: முடியுமானால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதால், பயணம் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். வாழ்விலும் வேலையிலும் தனித்து நிற்பவராகவும் முழுமையாக செய்பவராகவும் இருங்கள். கனிவான இதயத்துடனும் உள்ளார்ந்த உந்துதலுடனும் கூடிய வழிகாட்டுதல் பிறருக்கு உதவும். இது உங்கள் வாழ்வில் தானாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் இன்று காதலரை அது அப்செட் பண்ணாது. இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணையின் சோம்பேறித்தனத்தால் இன்று உங்கள் அனைத்து வேலைகளும் தாமதப்படும்.

சிம்மம்: இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும்.

வேலைகள் நிலுவையில் இருந்தாலும் ரொமான்சும் சமூக நிகழ்வும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.

கன்னி: சில டென்சன்களும் கருத்து வேறுபாடுகளும் வெறுப்பையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். நண்பர்களும் உறவினர்களும் சாதகமான செயல்கள் செய்வார்கள், அவர்களுடன் இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். கடினமான நேரத்தில் உங்கள் துணை உங்களுக்கு இன்று உறுதுணையாக இருக்க மாட்டார்.

துலாம்: குடிப்பழக்கத்தை விட்டொழிக்க உகந்த நாள். ஒயின் குடிப்பது உடல் நலனுக்கு விரோதி என்பதையும், உங்கள் செயல் திறனை அது குறைக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உடனடியாக தேவைப்படாத பொருட்களுக்காக செலவு செய்வதன் மூலம் உங்கள் துணைவரை அப்செட் செய்வீர்கள்.

இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

விருச்சிகம்: காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. மாலையில் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள், அது நிறைய நல்லதை செய்யும்.

ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணையுடன் ஆலோசிக்காமல் ஏதெனும் நீங்கள் திட்டமிட்டிருந்தால் அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

தனுசு: நிதானத்தை உரசிப் பார்ப்பதால் வாக்குவாதமும் மோதலும் ஏற்படும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பட்டியலை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். பிசியான சாலையில், நீங்கள் உங்களை மிக சிறந்த அதிர்ஷ்டக்காரராக இன்று நினைப்பீர்கள் ஏனெனில் உங்கள் அன்புக்குரியவரே அனைவரை விட சிறந்தவர்.

தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வார்கள் ஆனால் எப்பொதும் ரொமான்ட்டிகாக இருக்கும் என கூறமுடியாது. ஆனால் இன்று உங்களுக்கு மிக ரொமான்டிக்கான நாள்.

மகரம்: வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் சக்தி குறைந்திடும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். உங்கள் வீட்டுக் கடமைகளை முடிக்க பிள்ளைகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

தனிப்பட்ட வழிகாட்டுதல் உங்கள் உறவை மேம்படுத்தும். தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

கும்பம்: உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். இடைவிடாத வேலை நிறைந்த நாளிலும் சக்தியை சேர்த்துக் கொள்ள உங்களால் முடியும். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும்.

ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் துணை நல்ல மூடில் உள்ளார். அதனால் நீங்கள் ஒரு சர்ப்ரைசை இன்று எதிர்பார்க்கலாம்.

மீனம்: தாயாகப் போகும் பெண்கள் தரையில் நடக்கும் போது கவனம் தேவை. இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். உங்கள் உதவி தேவைப்படும் நண்பர்களை போய்ப் பாருங்கள். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள்.

சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உடல் ரீதியான நெருக்கம் உங்களுக்கு உங்கள் துணைக்கு இடையே இன்று சிறப்பாக இருக்கும்.