உறவினர்ரோடு நீராட சென்றவர் சடலமாக மீட்பு!

நாவலபிட்டி மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் வீட்டுக்கு வந்த உறவினர்ரோடு மகாவலி கங்கையில் ஆழமான பகுதியில் நீராட 2 இளைஞர்களும் ஒரு சிறுமியும் நீராட முற்பட்டபோது குறித்த மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் குறித்த சிறுமியையும் இளைஞனையும் உயிருடன் மீட்டனர். எனினும் நாவலபிட்டி பல்லேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ரஞ்சித்குமார் என்ற குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.