மூன்று வயதான தனது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய தாய்!

நாரம்மலை – அலுத்வெவ பிரதேசத்தில் சுமார் மூன்று வயதான தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாபிட்டி நீதவான் முன்னிலையில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டு முற்றத்தில் வளர்ந்த செடியை பிடுங்கியதாக கூறி 26 வயதான குறித்த பெண், தனது குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை அயலவர்கள் சிலர் தமது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து, காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் குழந்தை, குளியாபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.