வெளி­யே­றி­னார் மகிந்த!

தலைமை அமைச்­சர் செய­ல­கத்­தி­லி­ருந்து மகிந்த ராஜ­பக்ச வெளியேறிவிட்டார் என்று கூட்டு எதி­ரணி அறி­வித்­துள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் தலைமை அமைச்சராக நிய­மிக்­கப்­பட்ட மகிந்­த­வும், புதிய அமைச்சரவையும் செயற்படுவதற்கு மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றம் இடைக்­கால தடைஉத்தரவு பிறப்­பித்­தி­ருந்­தது.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்னணி உறுப்­பி­னர்­க­ளால் தாக்­கல்­ செய்­யப்­பட்ட மனுக்­களை விசாரணைக்கு எடுத்த பின்­னரே இவ்­வாறு இடைக்­கால தடைஉத்தரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

நீதி­மன்ற தீர்ப்­புக்கு மதிப்­ப­ளிக்­கும் வகை­யில் தலை­மை­ அமைச்சர் செய­ல­கத்­தி­லி­ருந்து மகிந்த வெளி­யே­றி­னார் என்­றும் ஆனால் ரணில் விக்­ர­ம­சிங்க தற்­போ­தும் தலைமை அமைச்­ச­ரின் உத்தியோகபூர்வ  இல்­ல­மான அலரி மாளி­கை­யில் தங்கியிருக்கிறார், இது பற்றி எவ­ரும் கண்­டு­கொள்­வ­தில்லை என்றும்  கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

நாட்­டின் சட்­டத்தை ரணில் மதிப்­பா­ரா­னால் அலரிமாளிகையை விட்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க உடன் வெளி­யே­ற­வேண்­டும் எனவும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.