4 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நால்வர் கைது!

கண்டி பகுதியில் 4 கோடி ரூபாவிற்கு அதிகமான பெறுமதியுடைய 11 கஜமுத்துக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலகொல்ல விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து 8 கஜமுத்துக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கண்டி நகரத்தில் வைத்து மற்றுமொரு சந்தேக நபர் 3 கஜமுத்துக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொனராகல, அம்பாறை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.